பெரம்பலூர்: ரூ..3.41 கோடியில் அரும்பாவூர் பெரிய ஏரி சீரமைக்கும் பணி; கலெக்டர் ஆய்வு!

schedule
2026-02-10 | 15:04h
update
2026-02-10 | 15:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Arumbavur Big Lake renovation work worth Rs. 3.41 crore; Collector inspects!

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பெரிய ஏரியில் ரூ.3.41 கோடியில் அகலப்படுத்தி, சீரமைப்புப் பணிகள் நடப்பதை கலெக்டர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டார்.

Advertisement

அரும்பாவூர் பெரிய ஏரியானது பச்சைமலை அடிவாரத்தின் வரத்து நீர் சேமிக்கும் முக்கிய ஏரியாக உள்ளது. கடந்த காலத்தில் பெய்த அதிகபடியான மழையின் காரணமாக ஏரி முழு கொள்ளளவையும் எட்டியது. அதன் காரணமாக, அரும்பாவூர் பெரிய ஏரியின் மதகு அருகில் இருந்த கரை சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு சுமார் 2.5 மீட்டர் அகலத்திற்கு உடைந்துவிட்டது. மேலும் கரையின் உடைந்த பகுதி தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. கரைகள் மற்றும் மதகுகள் நிரந்தரமாக சரி செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி அரும்பாவூர் பெரிய ஏரியை புனரமைக்கும் பணிக்கு ரூ.3.41 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்து 3.12.2025 அன்று பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த ஏரியின் கொள்ளளவு 52.63 மில்லியன் கன அடியாகும். கரையின் நீளம் 3,250 மீட்டர், 3 பாசன மதகுகளை கொண்ட இந்த ஏரியின் நீர் தேங்கும் பரப்பு 220.40 ஏக்கர் ஆகும். அதிகபட்சம் நீர் தேங்கும் உயரம் 3.75 மீட்டர் ஆகும். இந்த பெரிய ஏரியின் மூலம் 563.33 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

வருவாய் துறை, நீர்வள ஆதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 00:55:34
Privacy-Data & cookie usage: