பெரம்பலூர்:ரூ.1.14 கோடியில் அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தை திறந்து வைத்த அருண்நேரு எம்.பி., ரூ.11.10 கோடியில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்!

schedule
2026-02-27 | 14:43h
update
2026-02-27 | 14:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Arun Nehru MP inaugurated the new Arumbavur Town Panchayat office at a cost of Rs. 1.14 crore and inaugurated a drinking water project at a cost of Rs. 11.10 crore!

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு இன்று ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்து, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.11.10கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகளையும், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிராபகரன் முன்னிலையில் திறந்து தொடங்கி வைத்தார் .

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், அம்ருத் 2.0 குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.11.10 கோடியில் அரும்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் சுமார் 13,518 பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு நபருக்கு 75 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலைமாறி, அம்ரூத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததால் இனிவரும் காலங்களில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்ககப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, எறையூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், வாலிகண்டபுரம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தளத்தினையும் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.30 லட்சம் மதிப்பில் வாலிகண்டபுரம் முகமதியர்கள் தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினையும் பெரம்பலூர் பராளுமன்ற உறுப்பினர் கே. என்.அருண் நேரு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். ரூ.12,85,80,000 மதிப்பிலான திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ.துவாரகநாத் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் சரண்யா குமரன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அரும்பாவூர் சபிதாராகிணி, குரும்பலூர் தியாகராஜன், பூலாம்பாடி ருக்மணி, பேரூராட்சி உறுப்பினர்கள், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் நேரு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அக்ரி மாதவன், கான்ட்ராக்டர் தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2026 - 11:06:55
Privacy-Data & cookie usage: