Perambalur Arupthaa Hospital: Welfare assistance to the old age home on behalf of Dr. Samuel Devakumar!!
பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை மற்றும் பேராயர் பால்ராஜ் சமூக நல அறக்கட்டளை, குட் சமாரியன் சார்பில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு அருகே உள்ள லூசியாஸ் முதியோர் இல்லத்திற்கு அற்புதா மருத்துவமனை நிறுவனரும், மருத்துவ இயக்குனருமான டாக்டர் சாமுவேல் தேவக்குமார் தலைமையில் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் மஞ்சு, சுபிக்ஷா அங்குள்ள முதியோர்களை நலம் விசாரித்ததோடு, அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள், மற்றும் உதவிகள் கேட்டறிந்தனர். பின்னர், சிஸ்டர். லில்லி புஷ்பம் முன்னிலையில் முதியோர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், முதலுதவி மருந்துகளையும் வழங்கினர். முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீரன் நகர் அருகே உள்ள வேலா கருணை இல்லத்தில் வசிக்கும், ஆதரவற்றவர்களுக்காக இனிப்புகளை அதன் நிர்வாகி அனிதாவிடம் வழங்கினர். அற்புதா மருத்துவமனை பணியாளர்கள், லூசியாஸ் முதியோர் இல்ல நிர்வாகிகள், பலர் உடனிருந்தனர்.