பெரம்பலூர்: அரசு

தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் திமுக மாநில மாநாட்டிற்கு சென்றதால், பஸ்கள் இல்லாமல் பெண்கள் பொதுமக்கள் கடும் அவதி! கால்கடுக்க காத்து கிடந்தனர்!!

schedule
2026-03-09 | 16:53h
update
2026-03-10 | 03:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: As government-private buses went to the DMK women’s conference on a contractual basis, women public is suffering badly without buses! They were left waiting with their feet in pain!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒட்டு மொத்தமாக ஒப்பந்த அடிப்படையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் மாநில மாநாட்டிற்கு சென்றதால் பொதுமக்கள், பெண்கள், நோயாளிகள், தேர்விற்கு சென்று வந்த மாணவர்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து பஸ் எப்ப வரும்? என பஸ் ஸ்டாண்டில் காத்துக் கிடந்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், அதிக அளவு கிராம புறங்களை கொண்டு இருப்பதாலும், நகரத்திற்கு வந்து செல்ல அதிக அளவில் பொது போக்குவரத்தான பஸ்களையே நம்பி உள்ளனர். மற்ற மாநிலத்தில் உள்ளது போல நீர் வழி போக்குவரத்தோ, ஆகாய மார்க்க போக்குவரத்தோ, ரயில் போக்குவரத்தோ பெரம்பலூரில் இல்லை. பொது போக்குவரத்ததான பஸ்களில் கட்டணமின்றி செல்லலாம் வந்த பெண்கள் பெரும் ஏமாற்றத்துடன் காத்திருந்து ஆட்டோக்களில் அதிக பணம் கொடுத்து சென்றனர். முதியவர்கள், ஏழை எளிய மாணவர்கள், பெரும் சிரமத்துடன் லிப்ட் கேட்டும், ஆட்டோ, லாரிக்களில் வெகு காலதாதமாக வீடுகளை சென்றடைந்தனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மராமத்து பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடப்பதால் கர்ப்பி பெண்கள், பாலூட்டும் தாய்மர்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள் உட்கார இருக்கை கூட இல்லாமல் கால்கடுக்க வெகுநேரம் நின்றும், சுகாதாரம் மற்ற மண் தரையில் அமர்ந்தும் காத்து கிடந்து மாற்று வாகனங்களில் ஊர்களுக்கு சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 01:03:11
Privacy-Data & cookie usage: