பெரம்பலூர்; அஸ்வின்ஸ்-ல் கிறிஸ்துமஸ் முன்னிட்டு ப்ளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்!

schedule
2023-12-10 | 08:57h
update
2026-07-17 | 13:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur; Aswin’s Christmas plum cake production begins!

பெரம்பலூர் அஸ்வின்ஸ் பேக்டரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்துமஸ் கேக்தயாரிக்கும் பணி தொடங்கியது.

கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் ஆண்டுதோறும் டிசம்பர் 25தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே அனைவரின் நினைவில் வருவது கேக் வகைகள் தான். கிறிஸ்தவர்கள் கேக் வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். அந்தளவிற்கு கேக் கிறிஸ்துமஸ் பண்டிகையில் பிரதானமானது.

Advertisement

இந்த பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் அஸ்வின்ஸ்-ல் ஸ்பெஷல் கேக் தயாரித்து விற்பனை செய்து வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கிறிஸ்துமசை முன்னிட்டு பெரம்பலூர் அஸ்வின்ஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது.

அதில், முந்திரி, ஜெர்ரி, பேரிட்சை , திராட்சை , அத்திப்பழம் ,ப்ரூட்டி, ஆரஞ்சு பீல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு ப்ளம் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அஸ்வின்ஸ்-ன் மாஸ்டர்கள் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுவை மிகுந்த இந்த ப்ளம் கேக்குகள் அஸ்வின்ஸ்-ன் அனைத்து கிளைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

கேக்தயாரிக்கும் பணிகளை அஸ்வின்ஸ் நிறுவனர் மதிப்புறு முனைவர் கே.ஆர்.வி.கணேசன் பார்வையிட்டு மாஸ்டர்களுக்கு சிறப்பாக செய்ய வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.07.2026 - 13:55:57
Privacy-Data & cookie usage: