ஓட்டு கேட்ட பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளரிடம் அதிமுகவினர், பொதுமக்கள் சரமாரி கேள்வி : வேட்பாளர் பதில்

schedule
2016-04-27 | 14:20h
update
2026-06-23 | 08:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக பெரம்பலூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான இரா. தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு அவர் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வெண்பாவூரில் தனது பிரச்சாரத்தை துவங்கிய இரா. தமிழ்செல்வன், வடகரை, பாண்டகப்பாடி, மாவிலங்கை கிராமங்களில் வாக்கு சேகரித்து விட்டு நெற்குணம் காலனிக்கு வாக்கு சேகரிக்க சென்ற வழியில் கருக்கத்தான் குட்டையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிக்க பிரச்சார வாகனத்தை நிறுத்தி பேசத் துவங்கினார்.

அப்போது அங்கிருந்த அதிமுகவினர் மற்றும் தேசிய ஊரக வேலை உறுத்திட்ட தொழிலாளர்கள் பிரச்சார வாகனத்தின் அருகே வந்து வேட்பாளர் இரா.தமிழ்செல்வனிடம் சாலை, குடிநீர், சாக்கடை உள்ளிட்ட நாங்கள் வைத்த எந்த விதமான கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை, எங்களிடம் ஓட்டு கேட்டு வந்து இருக்கிறீர்கள் என வாக்கு வாதம் செய்தனர்.

Advertisement

இதனால், சற்று மனம் தளர்ந்த வேட்பாளர் தமிழ்செல்வன், உடனடியாக கட்சியினரை சமதானம் செய்து பொதுமக்களாகிய நீங்கள் கேட்ட திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நேரம் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சென்று பரிசோதித்து கொள்ளுங்கள் என பதிலளித்தார்.

கார சார விவாதம் செய்த தொழிலாளர்கள் மற்றும் அங்கிருந்த அதிமுகவினர் மீண்டும் அம்மாவிற்கே தான் எங்கள் ஆதரவு, இரட்டை இலைக்குதான் எங்கள் ஓட்டு என தெரிவித்தனர்.

பின்னர், அங்கிருந்த மக்கள் சமசரம் செய்து கொண்டனர். பின்னர், நெற்குணம் காலணி பகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

பின்னர், நெற்குணம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைகளை எடுத்து கூறியும், கல்லூரி, கல்லாறு நீர்த்தேக்கம், மற்றும் அப்பகுதியில் கிருஷ்ணாபுரம் முதல் கூகையூர் வரை கொண்டு வரப்பட்டுள்ள இருவழி சாலைகளை திட்டங்களையும் எடுத்து கூறினார்.

மேலும், பல புதிய திட்டங்களை கொண்டு வர மீண்டும் அதிமுகவிற்கே வாக்களிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உள்பட கட்சியினர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 08:27:41
Privacy-Data & cookie usage: