பெரம்பலூர்: S.C., S.T., பிரிவினருக்கான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க உதவி மையம்; கலெக்டர் தகவல்!

schedule
2024-11-04 | 14:18h
update
2024-11-04 | 14:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Atrocities Help Desk for S.C., S.T. Sections; Collector Information!

2023 – 2024- ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன்“ கூடிய உதவி மையம் அமைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில், அலுவலக பணி நேரத்தில் புகார்களை தெரிவிக்கலாம். இந்த தொலைபேசி சேவையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 06:26:26
Privacy-Data & cookie usage: