பெரம்பலூர்: காதலர்களை தாக்கி, காதலியிடம் பாலியியல் சீண்டல்? நண்பர்களை அழைத்து வந்து அத்துமீறியவர்கள் மீது சரமரியாக தாக்கிய காதலன்! போலீசார் விசாரணை!

schedule
2026-03-14 | 19:54h
update
2026-03-14 | 19:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Attacking lovers and sexually harassing girlfriend? The lover who brought friends and attacked the trespassers! Police investigation!

பெரம்பலூர் மாவட்டம், காரை அருகே தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி, தாக்கியதுடன், இளம் பெண்ணிடம் பாலியியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது உள்ள வாலிபர் ஒருவர் கடந்த 12ஆம் தேதி வியாழக்கிழமை மாலை அவரது காதலியை பைக்கில் அழைத்து கொண்டு, பாடாலூர் அருகே காரை கிராமத்திற்கு சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை கண்காணித்து பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள் சிலர் தனிமையில் இருந்த காதலர்களை மிரட்டி தாக்கி, அந்த பெண்ணிடம் காதலன் கண்முன்னே பாலியியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனது காதலியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சொந்த ஊர் வந்த வாலிபர் நடந்ததை தனது நண்பர்களிடம் தெரிவித்தார். பின்னர்,அவர்களுடன் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்களை அடையாளம் கண்டு சென்று வாலிபர் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனைக் கண்ட ரோந்து போலீசார் அவர்கள் அனைவரையும் பிடித்து, பாடாலூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனது காதலியிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது, தங்களை தாக்கி பாலியியல் சீண்டலில் அந்த வாலிபர் உள்ளிட்ட அவனது நண்பர்கள் சிலர் ஈடுபட்டதாகவும், அதனால் அவனை தேடி கண்டுபிடித்து தாக்கியதாகவும் தெரிவித்த அந்த வாலிபர், தனது காதலி குறித்த விவரங்கள் எதுவும் காவல் நிலையத்தில் தெரிவிக்கவில்லை! அவரைப் பற்றிய விவரம் தெரிய வந்தால் அவர்களது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு பெருத்த அவமானமும், மன உளைச்சலும் ஏற்பட்டு விடும் என்பதால், போலீசாரை அணுகாமல், தனது காதலியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர்களை நண்பர்கள் சிலர் உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதனால், குழப்பமடைந்துள்ள பாடாலூர் போலீசார் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேகத்திற்கிடமாக 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 15:31:54
Privacy-Data & cookie usage: