பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் காரில் செல்பவர்களை பைக்கில் துரத்தி மடக்கி வழிப்பறி செய்ய முயற்சி!

schedule
2026-05-19 | 14:52h
update
2026-05-19 | 14:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Attempted Robbery on National Highway—Motorcyclists Chase and Intercept Car Occupants!

[ Model Photo By AI ] பெரம்பலூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்லும் போது, இரவில் காரை வழிமறித்து பைக்கில் சென்றவர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், நெடுங்கூர் அருகே உள்ள நெய்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் உறவினர் திருமணம் நேற்று பெரம்பலூரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் குடும்பத்துடன் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, நாரணமங்கலம் மேம்பாலத்தில் சென்ற போது நோட்டமிட்டு அதிவேகமாக பைக்கில் வந்த 2 பேர் காருக்குள் இருப்பவர்களிடம் சைகை காட்டி நிறுத்த மிரட்டி உள்ளனர். இதில் சுதாகரித்த அவர்கள் ஆலத்தூர் அடுத்த ஓட்டல் ஒன்றில் காரை நிறுத்தினர். அங்கிருந்தவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் திருச்சி செல்லும் மற்றொரு காரை வழித்துணைக்கு அனுப்பி வைத்தனர். நெடுங்கூர் பிரிவில் நெய்குளம் செல்ல கார் திரும்பியது. அங்கிருந்த திருச்சி மாவட்ட சோதனை சாவடி அருகே சற்று தள்ளி இருந்தவர்களை அருகே சென்று பார்த்த போது அவர்கள்தான் காரை வழிமறிக்க முயற்சி செய்தவர்கள் என்பதை உறுதி செய்து அவர்களை சோதனைச் சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பைக்கில் வந்த இரண்டு பேரும் பெரம்பலூரில் உள்ள பிரியாணி கடைகயில் வேலை செய்பவர்கள் என கூறினர். 2 பேரில் ஒருவர் மற்றொருவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபாராதத்தை விதித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

கடந்த ஆண்டுகளில் காரில் தூங்கி கொண்டிருந்த கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம், பஞ்சரான காருக்கு உதவுவது போல தங்கசங்கிலி பறித்த சம்பவங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து உள்ளதால் நெடுஞ்சாலை போலீசார் திருச்சி, கடலூர் மாவட்ட போலீசாருடன் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரம்பலூர் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.05.2026 - 15:13:21
Privacy-Data & cookie usage: