பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு விருது; கலெக்டர் தகவல்!

schedule
2026-10-12 | 14:48h
update
2026-10-12 | 14:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Awards for individuals and organizations that have performed exceptionally well at the state level for the welfare of persons with disabilities; Collector announces.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கவுரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 3 டிசம்பர் 2026 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்களுக்கு (கை,கால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயிலிருந்து குணமடைந்தோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர்,பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோர், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மனநோய், ரத்தம் உறையாமை, இரத்த அழிவுசோகை, அரிவாளனு இரத்தசோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, நடுக்குவாதம், பல்வகை குறைபாடு) ஆகியோர்களுக்கு என பத்து விருதுகள், ஹெலன்கெல்லர் விருது பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு என இரண்டு விருதுகள், சிறந்த ஆசிரியருக்கு (அறிவுசார் குறையுடையோருக்கு கற்ப்பித்தல்) ஒரு விருது, சிறந்த சமூகப் பணியாளருக்கு ஒரு விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ஒரு விருது, மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனத்திற்கு ஒரு விருது, ஹெலன்கெல்லர் விருது ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடையோர்க்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியருக்கு ஒரு விருது, ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (அறிவுசார் குறையுடையோருக்கு) கற்பிக்கும் சிறந்த ஆசிரியருக்கு ஒரு விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இரண்டு விருதுகள், பொதுக் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 2 விருதுகள் என அனைத்து விருதுக்கும் தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

Advertisement

இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 22.10.2026 க்குள் விண்ணப்பிக்கலாம். வலைதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 22.10.2026 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்விருதிற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, 03.12.2026 உலக மாற்றுத்திறனாளிகள் நாள் விழா நிகழ்வில் முதலமைச்சர் மாநில விருதுகள் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.10.2026 - 15:21:06
Privacy-Data & cookie usage: