Perambalur: Awards for those serving the welfare of persons with disabilities; Collector’s announcement!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வு குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருந்தாளிகளுக்கு தமிழக முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2026 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளர் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 25.06.2026- க்குள் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரால் மாநில விருதுகள் வழங்கப்படும் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.