Perambalur: Awareness Mini-Marathon Held to Urge 100% Voter Turnout in Elections; Collector Flags Off Event!
கடந்த தேர்தல்களில் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. அதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலருமான, கலெக்டர் ந.மிருணாளினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த மாரத்தான் ஓட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பாலக்கரை முதல் சங்குபேட்டை வழியாக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.