பெரம்பலூர்: தமிழ்நாடு அரசின் புதிய தொழிலாளர் சட்ட வரைவு விதிகளில் திருத்தம் செய்ய கோரி பி.எம்.எஸ். மாநில கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2024-08-25 | 15:54h
update
2024-08-25 | 15:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: B.M.S. has demanded amendment in the draft provisions of the new labor law of the Tamil Nadu government. Resolution in the state meeting!

பாரதீய மஸ்தூர் சங்கத்தின் ( பி.எம்.எஸ்) அகில பாரத மாநாடு தமிழகத்தில் நடைபெற உள்ளது. பி.எம்.எஸ் நடத்திய போராட்டத்தால், நாடு முழுவதும் யுனிபைடு பென்சன் ஸ்கீமை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை சங்கம் வரவேற்கிறது. ஊழியர்களின் கடைசி மாதம் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கொடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் கடிதமாக கொடுக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது,

Advertisement

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்ட வரைவு விதிகளில், சம்பளங்கள் தொகுப்பு, சமூக பாதுகாப்பு தொகுப்பு ஆகியவற்றை பாரதீய மஸ்தூர் சங்கம் வரவேற்கிறது. அதில், இன்டஸ்ட்ரியல் ரிலேசன்ஷிப் கோடு, ஆக்குபேசன் அண்ட் சேப்டி கோடுகளில், திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும்,

சங்கத்திற்கு 70 ஆண்டு தொடங்கி உள்ளது, அதனை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சங்கத்தை விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட செயலாளர் ஏ கே செந்தில்குமார், மாவட்டத் தலைவர் சிவராஜ், மாநில துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் அமுதா கர்ணன், மற்றும் மாவட்ட துணை தலைவர்கள், தமிழரசன் குழந்தைவேல், துணை செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், தமிழரசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 23:14:23
Privacy-Data & cookie usage: