பெரம்பலூர்: முறை தவறிய உறவால் இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை சாவு?! போலீசார் விசாரணை!!

schedule
2026-02-08 | 15:23h
update
2026-02-08 | 15:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Baby born to young woman due to illicit relationship dies?! Police investigation underway!!

மாதிரிப்படம்

பெரம்பலூர் மாவட்டம், வ.களத்தூர் அருகே உள்ள பிம்பலூர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (26), கோவிந்தம்மாள் (23), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

மணிகண்டன் கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் வேலைக்காக மாலத்தீவு சென்றிருந்த நிலையில் நேற்று முன் தினம் விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களை சந்தித்த மணிகண்டன், தனது மனைவியின் வயிறு பெரிதாக இருப்பதை அறிந்து ஏன் இவ்வாறு வயிற்றுப் பகுதி மட்டும் உனக்கு பெரிதாக இருக்கிறது என கேட்டுள்ளார்.

குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருப்பதால் தனக்கு தொப்பை போட்டு விட்டதாக கூறி மணிகண்டனை சமாளித்த கோவிந்தம்மாள், நேற்றிரவு 9.30 மணியளவில், கணவருக்கும், மகள்களுக்கும் உணவுப் பரிமாறிக் கொண்டிருந்த நிலையில், தனக்கு திடீரென வயிறு வலிப்பதாக கூறி, இயற்கை உபாதைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் இரவு 11 மணி அளவில் தனது மனைவி கோவிந்தம்மாளை தேடி சென்றார்.

Advertisement

அவர், வீட்டிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் உள்ள தைலமரத் தோப்பிற்குள் ரத்தக் கரைகளுடன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், உறவினர்கள் உதவியுடன் கோவிந்தம்மாளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து சேர்த்தார். கோவிந்தம்மாளை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, குழந்தையை பிரசவித்திருக்க வேண்டும். ஆகவே, அவர் மயங்கி கிடந்த இடத்திற்குச் சென்று குழந்தை சிசுவேதும் இருக்கிறதா என்பதை கண்டறிந்து வாருங்கள் எனக்கு தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மணிகண்டன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் முட்புதரிலிருந்து உயிரிழந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து ஒப்படைத்தனர். குழந்தை உடருக்கூறு ஆய்வுக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வ.களத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் 16 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற நிலையில், கோவிந்தம்மாளுக்கு ஆண் நண்பருடன் ஏற்பட்ட முறை தவறிய உறவில் கர்ப்பமடைந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், சொல்லாமல் கொள்ளாமல், திடீரென கணவர் ஊருக்கு வந்ததால் அவரிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற அதிர்ச்சியில், குழந்தையை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ பிரசவித்து, அதனை அப்புறப்படுத்த முயற்சித்த போது ஏற்பட்ட மயக்கத்தால், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கலாம் என்றும், கோவிந்தம்மாளுடன் பழகிய ஆண் நண்பர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி பழக்கமானார்? குழந்தை உயிருடன் பிறந்த குழந்தையை கொலை செய்தாரா அல்லது இறந்து பிறந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் தவித்து வரும் மணிகண்டன், மனைவி கோவிந்தம்மாள் தன்னிடம் நடந்ததை கூறி மன்னிப்பு கேட்டு இருந்தால், பரிதாபமாய் இந்த பச்சிளம் ஆண் சிசு உயிர் பறிபோய் இருக்காது என போலீசாரிடம் வேதனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2026 - 13:05:01
Privacy-Data & cookie usage: