பெரம்பலூர்; வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியை சுற்றி 2 கி.மீ தூரம் வரையில் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் பறக்க தடை!

schedule
2026-04-22 | 12:28h
update
2026-04-22 | 12:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Ban on the flight of unmanned aerial vehicles and drones within a 2-kilometer radius of Aadav Public School, the vote-counting center.

பெரம்பலூர் மாவட்டத்தில் 147. பெரம்பலூர் (தனி) மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் 23.04.2026 அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026, இற்கான வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு பதிவான வாக்குகளுடன் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் அனைத்தும் பெரம்பலூர் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.

Advertisement

எனவே, 23.04.2026 அன்று முதல் வாக்கு எண்ணும் நாளான 04.05.2026 வரை தேர்தலின் போது பதிவான வாக்குகளுடன் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகமானது 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Red Zone Area) அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ஆளில்லாத விமானங்கள் (Remotely Piloted Aircraft System- RPAS) மற்றும் ட்ரோன்கள் (Drone) பறக்க தடை விதிக்கப்படுகிறது என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 12:31:54
Privacy-Data & cookie usage: