பெரம்பலூர்: வழக்கறிஞர் சங்கம் நாளை நீதிமன்றம் புறக்கணிப்பு

schedule
2026-10-15 | 17:09h
update
2026-10-15 | 17:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

!Perambalur: Bar Association to boycott court proceedings tomorrow!

பெரம்பலூர் வழக்கறிஞர் சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டம் இன்று தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடந்தது. அப்போது, 09.10.2026 காலை காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர் தங்கவிக்ரம் என்ற வழக்கறிஞர் கடந்த நடைபயற்சி மேற்கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞர் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக தங்கவிக்ரமை சரமாரியாக வெட்டி கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும், தக்க சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் சம்பந்தப்பட்ட காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இது போன்ற குற்ற செயல்கள் வழக்கறிஞர்கள் மீது தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்தும். தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும் பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் (Crl) சார்பாக நாளை 16.10.2026 ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்து சங்க நமது விலகியிருப்பதென ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.10.2026 - 17:28:18
Privacy-Data & cookie usage: