பெரம்பலூர்: BC, MBC, DNT மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-06-04 | 12:35h
update
2026-06-04 | 12:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: BC, MBC, and DNT Students Can Apply for Admission to Government Hostels — Collector Informs.

தமிழ்நாடு அரசால் பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல மாணவர் / மாணவியர்களுக்கென பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 15 விடுதிகள் பள்ளி மாணவர்களுக்கும், 5 விடுதிகள் கல்லூரி மாணவர்களுக்கும், 9 விடுதிகள் பள்ளி மாணவியர்களுக்கும், 7 விடுதிகள் கல்லூரி மாணவியர்களுக்கும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர் / மாணவியர் சேரத்தகுதி உடையவர்கள். அனைத்து விடுதியிலும் 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10–ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்/மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10–ஆம் வகுப்பு மற்றும் 12–ஆம் வகுப்பு பயிலும் மாணவர் / மாணவியருக்கு கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET / JEE நுழைவுத் தேர்வுக்கான வினாவங்கி, சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினாவங்கி புத்தகங்கள் வழங்கப்படும். எவ்வித செலவினமும் இல்லாமல் இந்த சலுகைகள் அனைத்தும் விடுதிகளில் வழங்கப்படுகின்றன.

Advertisement

விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கான பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளனிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2026 – க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள்ளும் சமர்பிக்க வேண்டும்.

மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 12:50:34
Privacy-Data & cookie usage: