பெரம்பலூர்: விதவை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெற வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும்; கலெக்டர் தகவல்!

schedule
2026-09-29 | 17:06h
update
2026-09-29 | 17:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Beneficiaries of pensions for widows, the elderly, and persons with disabilities must link their Aadhaar with their bank accounts; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டத்தில், மத்திய அரசு பங்களிப்புடன் வழங்கப்படும் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம் மற்றும் இந்திராகாந்தி மாற்றுத்திறனாளி ஓய்வூதிய பயனாளிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் ஆதார் எண் அடிப்படையில் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஓய்வூதியத்தினை வரவு வைக்கும் முறையினை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனவே, இத்திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் அல்லது தபால் துறை கணக்கின் மூலம் மட்டுமே செப்டம்பர் மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவார்கள்.

Advertisement

எனவே, பயனாளிகள் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அல்லது தபால் துறை கணக்கில் ஓய்வூதியம் வரப்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம். இந்நேர்வில் ஏதேனும் தகவல் தெரிந்துக்கொள்ள வேண்டி இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு பிரிவில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.மேலும், கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரிவில் இதற்கென பிரத்யேக உதவி மையம் செயல்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் சென்று சேர்வதை உறுதிபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.09.2026 - 17:13:45
Privacy-Data & cookie usage: