பெரம்பலூர்: ரூ. 2 கோடி மதிப்பில் காவலர் தங்கும் விடுதிக்கு பூமி பூஜை!

schedule
2026-05-14 | 13:44h
update
2026-05-14 | 13:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Bhoomi Puja performed for a police quarters worth Rs. 2 crore!

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் புதிய காவலர் தங்கும் விடுதி ரூ. 2 கோடி மதிப்பில் 4500 சதுர அடியில் கட்டுவதற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. போலீஸ் எஸ்.பி பிரபாகர் இதனை தொடங்கி வைத்தார்.

Advertisement

புதிதாக கட்டப்பட உள்ள காவலர் தங்கும் விடுதி, ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் வசதியான தங்கும் சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளியூரில் இருந்து பணிக்காக வருகை தரும் காவலர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட உள்ளது. காவல்துறையினரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களின் ஓய்வு மற்றும் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கட்டப்பட உள்ளது.

மாவட்ட கூடுதல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பெரம்பலூர் டி.எஸ். பி. ரவிசந்திரன், பெரம்பலூர் டவுன் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் உள்பட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.05.2026 - 13:54:45
Privacy-Data & cookie usage: