Perambalur: Bike collides with a truck moving ahead; young man dies in the accident!
சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே லாரி ஒன்று சவுக்கு கட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு பெரம்பலூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்ததது. அப்போது லாரியின் பின்னால், வ.களத்தூர் மில்லத் நகரை சேர்ந்த சையத் அலி என்பவரின் மகன் நவ்ஷாத் அலி பைக்கை ஓட்டிச் சென்றார். அப்போது முன்னே சவுக்கு கட்டைகள் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் எதிர்பாரதவிதமாக மோதி பைக் விபத்துக்குள்ளானர். இதில், நவ்ஷாத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கப் பதிவு செய்த மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவரான திருக்கோவிலூரை சேர்ந்த உத்தரநாதன் (40), என்பவரை கைது செய்து விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபரின் சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.