பெரம்பலூர் பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி!

schedule
2024-03-07 | 19:01h
update
2024-03-07 | 19:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Bikes head-on collision ; One person is killed!

பெரம்பலூர் புறவழிச்சாலையில், கோனேரி பாளையம் பிரிவு சாலைக்கும்-ஆலம்பாடி பிரிவு சாலைக்கும் இடையே அதிவேகமாக சென்ற இரு யமஹா ஆர்ஒன்5 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்தில், உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றொரு வாலிபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த பூபதி – ஆரியமாலா தம்பதியினரின் மூத்த மகன் விஷ்வா (22), டிப்ளமோ எலக்ட்ரிகல் படித்துள்ளார். கீழப்புலியூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிராமத்தில் உள்ள அவரது பெரியம்மா புவனேஸ்வரியை பார்ப்பதற்காக சென்றவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனக்குச் சொந்தமான யமாஹா ஆர்15 பைக்கில் பெரம்பலூர் புறவழிச்சாலையில், ஆலம்பாடி பிரிவு சாலைக்கும்-கோனேரி பாளையம் பிரிவு சாலைக்கும் இடையே வந்த போது, எதிரே அதிவேகமாக கடலூரில் இருந்து தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி நோக்கி மாணவர் ஒருவர் ஓட்டி வந்த மற்றொரு யமஹா ஆர்15′ பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த திடீர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த விஷ்வா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டி வந்த பெயர் ஊர் விலாசம் தெரியாத மற்றொரு வாலிபர் படுங்காயங்களுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்வாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக பைக்குகள் இயக்கப்பட்டதாலேயே விபத்துகள் நேர்ந்ததாக தெரிய வந்திருக்கிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 11:08:48
Privacy-Data & cookie usage: