பெரம்பலூர் பாஜகவிற்கு, புதிய மாவட்டத் தலைவர் நியமனம்!

schedule
2021-11-13 | 07:31h
update
2021-11-13 | 07:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur BJP appoints new district President!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். டிப்ளமோ ட்ரிபிள்இ படித்துள்ள செல்வராஜ், வாலிகண்டபுரம் கிராமத்தில் ஜோதி வித்யாலயா என்ற சிபிஎஸ்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்து வரும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரம்பலூர் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உமா ஹைமாவதி என்ற மனைவியும், திரு லோகேஷ், தேஜஸ் வர், என்ற இரண்டு மகன்களும், ஜோதிஸ்வரூபா என்ற ஒரு மகளும் உள்ளனர். புதிய மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வராஜூக்கு மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த சிசிஆர் (எ) சந்திசேகரன் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 00:33:32
Privacy-Data & cookie usage: