பெரம்பலூர்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி; கலெக்டர் தகவல்!

schedule
2026-02-05 | 18:15h
update
2026-02-05 | 18:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Block Coordinator positions available in the Tamil Nadu State Rural Livelihoods Mission; Collector announces!

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாத ஊதியம் ரூ.12,000/-வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் கணினியில் 3 மாத கால சான்றிதழ் MS Office அல்லது Computer Science (or) Computer applications பெற்றிருத்தல் வேண்டும், வயது வரம்பு 30 வயதிற்கு உட்பட்டவர்கள், மகளிர் சுய உதவி குழு மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு (SHG/PLF)-ல் குறைந்தது 5 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும், தொடர்புடைய வட்டாரத்துக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும், இருசக்கர வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும், நல்ல சாதனைப் பதிவைக் கொண்டிருக்க வேண்டும், நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் மற்றும் பிற காரணங்களால் முந்தைய TNSRLM / Pudhu vaazhu/ IFAD திட்டம் மற்றும் வேறு எந்த மாநில அரசு திட்டங்கள் / பணிகளிலிருந்தும் நிறுத்தப்பட்டிருக்கக்கூடாது / நீக்கப்பட்டிருக்கக்கூடாது. எனவே, தகுதிகளையுடைய விண்ணப்பதார்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர், தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்தில் 16.02.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் 16.02.2026 அன்று மாலை 5.00 மணிக்கு பின்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 14:19:34
Privacy-Data & cookie usage: