பெரம்பலூர் : எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் கொத்தடிமை தொழிலாளர் முறை விழிப்புணர்வு, உறுதிமொழி!

schedule
2025-02-07 | 14:37h
update
2025-02-07 | 14:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Bonded labor awareness and pledge at Esanai Government Higher Secondary School!

பெரம்பலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ மருதமுத்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு டாக்டர் வனிதா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல் மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் ரேகா ஆகியோர் இணைந்து மாணவ மாணவிகளிடம் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றி எடுத்துறைத்து பின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவை குறித்து மாணவர்களிடம் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மேலும், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என எடுத்துரைத்தனர். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் செயல்படும் இலவச புகார் எண்களான குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை இலவச புகார் எண்களான 255214 & 180004252650 Women Help Desk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567 ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581 பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181
கிரைம் உதவி எண்கள் 1930 மேலும், மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.
.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 14:14:19
Privacy-Data & cookie usage: