பெரம்பலூர்: குத்துச்சண்டை பயிற்சி மையம்: எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்!

schedule
2025-05-05 | 17:16h
update
2025-05-05 | 17:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Boxing Training Center: Inaugurated by Collector Grace Bachao in the presence of MLA Prabhakaran!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் உள்ள பல்நோக்கு உள் விளையாட்டரங்கில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், போலீஸ் எஸ்.பி. ஆதர்ஸ் பசேரா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, குத்துச் சண்டை பயிற்சி பெறவுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

Advertisement

பெரம்பலுார் மாவட்டத்தில் ஸ்டார் குத்துச்சண்டை அகாடமிக்காக கலெக்டரின் தலைமையில் தேர்வுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட குத்துச் சண்டை பயிற்றுநருக்கு ஆணையினை கலெக்டர் வழங்கினார். மேலும் பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலமாக குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு சேர்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 வீரர்கள் மற்றும் 20 வீராங்கனைகளுக்கு குத்துச்சண்டை பயிற்சி தொடங்கப்பட்டதை மாவட்ட விளையாட்டரங்கத்தை பார்வையிட்டனர். மேலும், மாவட்ட பல்நோக்கு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ள ஸ்டார் குத்துச்சண்டை அகாடமியில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தினசரி காலை, மாலை உயரிய தரத்திலான பயிற்சிகள், சத்தான உணவுகள், விளையாட்டு சீருடைகள், விளையாட்டு காலணிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனி நபர்களுக்கு விளையாட்டுகளை முழுதிறனுடன் அணுகவும், அவர்கள் உயர்மட்ட போட்டிகளில் பங்கு பெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரா.பொற்கொடி வாசுதேவன், தடகள பயிற்றுநர் மோகனா, டேக்வாண்டோ பயிற்றுநர் து.பரணிதேவி மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.05.2026 - 15:11:43
Privacy-Data & cookie usage: