Perambalur: Bus falls into ditch after driver falls asleep; 20 injured! Pedestrian dies in another accident!
மதுரையில் இருந்து சென்னைக்கு தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்று சென்னையை நோக்கி 45 பயணிகளுடன் புறப்பட்டது. உசிலம்பட்டி அருகே உள்ள பேரையூரை சேர்ந்த நல்லமுத்து மகன் கார்த்திக் ராஜா (37) பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, டிரைவர் கார்த்திக் ராஜாவிற்கு தூக்கம் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பஸ்சில் பயணித்த செய்த 45 பேரில் சுமார் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. மங்களமேடு போலீசார் காயம் ஏற்பட்ட பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு விபத்து:
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சோலைமுத்து மகன் ரஜினி (50). இவர் நேற்றிரவு மது போதையில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் RS மஹால் அருகே நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த பயணிகள் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விரு விபத்துகள் குறித்தும் வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.