பெரம்பலூர்: ஸ்கூட்டி, புல்லட் மீது மோதிய கார் புளியமரத்தில் மோதி நின்றது! ஒருவர் பலி!

schedule
2026-07-05 | 16:10h
update
2026-07-05 | 16:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Car collides with a Scooty and a Bullet, then crashes into a tamarind tree and comes to a halt; one person killed.

பெரம்பலூர் – அரியலூர் சாலையில் இன்று மாலை கார் ஒன்று முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஸ்கூட்டி மீதும், எதிரே வந்த புல்லட் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு சாலைஓரம் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது.

Advertisement

திருவண்ணாமலையில் அரியலூருக்கு கார் ஒன்று 5 பேருடன் சென்று கொண்டிருந்தது. அதனை அரியலூர் அருகே உள்ள பார்ப்பனஞ்சேரியை சேர்ந்த சிங்கமுத்து மகன் அருள்ராஜ் (36) ஓட்டி வந்தார். பெரம்பலூர் – அரியலூர் சாலையில் கவுள்பாளையம் அரசு குடியிருப்பு பிரிவு சாலை அருகே சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஸ்கூட்டி மீது மோதியது. பின்னர் எதிரே மருவத்தூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த்குமார் ஓட்டி வந்த புல்லட் பைக் மீதும் மோதி விட்டு அருகில் இருந்த புளிமரத்தில் மோதி நின்றது. இதில் ஸ்கூட்டியை ஓட்டி வந்த பெரம்பலூர் விளாமுத்தூர் ரோடு பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் கார்த்தி (27). சம்பவ இடத்திலேயே உயிரியிழந்தார். அவருடன் உடன் வந்த பெரம்பலூர் சங்குப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (26), புல்லட் ஓட்டி வந்த அரவிந்குமார் மற்றும் காரில் வந்த 2 பெண்கள் உள்பட 6 பேரும் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 16:47:15
Privacy-Data & cookie usage: