பெரம்பலூர்: அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள்; கலெக்டர் ந.மிருணாளினி தகவல்!

schedule
2026-03-16 | 11:14h
update
2026-03-16 | 11:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: CCTV cameras in all polling stations; Collector N. Mrunalini informs.

தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டர் மனு ந.மிருணாளினி தலைமையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 147.பெரம்பலூர்(தனி) மற்றும் 148.குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதிகளிலும் மொத்தம் 732 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இந்த முறை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது, மேலும், பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும்படையில் தலா 9 குழுக்கள் வீதம் 18 குழுக்களும், நிலையான கண்காணிப்பு குழுவில் தலா 9 குழுக்கள் வீதம் 18 குழுக்களும் என மொத்தம் 36 குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடியோ கண்காணிப்புக்கு நான்கு குழுக்களும், வீடியோ பார்வையிடுவதற்கு இரண்டு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேர்தரல் தொடர்பான புகார்களை தெரிவித்திட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கிடும் வகையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களோ, அரசியல் கட்சியினரோ தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் “1800 599 4402” இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார் அளித்தவரின் பெயர் வெளிப்படாமல் புகாரளித்திட ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் CVIGIL என்ற மொபைல் செயலியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக நடத்தை விதிமீறல், வாக்காளர்களை லஞ்சம் வழங்கி கவருதல் / அச்சுறுத்துதல் தொடர்பான புகார்களை மொபைல் போனில் நிகழ்நேரத்தில் புகைப்படம் / வீடியோ / ஆடியோவாக பதிவு செய்து புகாரளித்திடலாம்.

தேர்தல் காலத்தில் பொதுமக்கள் ரூ. 50,000க்கு மேல் ரொக்கமாகவும், ரூ. 10,000 க்கு மேற்பட்ட மதிப்பில் பொருட்களாகவும் எடுத்துச் சென்று தணிக்கையின் போது உரிய ஆதாரங்கள் காட்டப்படாவிட்டால் அத்தொகை மற்றும் பொருட்கள் கைப்பற்றுகை செய்யப்படும். இதனை தவிர்த்துக் கொள்ள பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் சரியான அசல் ஆவணங்களையும், ஆதாரங்களையும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். Suvidha என்ற செயலி மூலம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட இனங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். தற்போது நிலவரப்படி, அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் 5279 நபர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் காவல்துறையினர் 720 நபர்கள் , தேர்தல் நுண் பார்வையாளர்கள் 125 நபர்களும் அடங்குவர், என தெரிவித்தார்.

மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) வேல்முருகன், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) அருளானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 21:17:50
Privacy-Data & cookie usage: