பெரம்பலூர்: சதுரங்க வேட்டை; ஆப்பிரிக்க தங்க சுரங்கத்தில் முதலீடு என சுமார் 10 கோடி மோசடி செய்ததில் 3 பேர் கைது!

schedule
2026-05-30 | 17:42h
update
2026-05-30 | 17:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “Chess Hunt” Scam—Three Arrested for Defrauding Victims of Approximately ₹10 Crores Through False Promises of Investment in an African Gold Mine.

தங்கச் சுரக்கத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிங்கப்பூர் பொறியாளரிடம் ரூ.10 கோடி மோசடி செய்ததில் இரு பெண்கள் உள்பட 3 பேர்கைது செய்ய்பட்படு, அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம், 15 பவுன் தங்கம், முதலீட்டு பத்திரம், சொகுசு கார் ஆகியவற்றை பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடி அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் பாரதிராஜா (38) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் என்ஜினியராக உள்ளார். சொந்த ஊருக்கு வந்தபோது தனது நண்பர்கள் மூலம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த பிரவின், தர்மபுரியைச் சேர்ந்த சுகனேஸ்வரன் ஆகியோருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம் என தெரிவித்த அவர்கள் பாரதிராஜாவிடமிருந்து 2 கோடி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறியதை நம்பிய பாரதிராஜா, 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பல தவணைகளாக தனது கையில் உள்ள பணம் மற்றும் வீடு காடு சொத்துக்களை விற்றும், உறவினர்கள் மற்றும் 90 பேரிடம் கடனாக பணத்தைப் பெற்று மொத்தமாக சுமார் ரூ.10 கோடி வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

பணத்தைப் பெற்றுக் கொண்ட பிரவீன் மற்றும் சுகனேஸ்வரன் பங்களா கார் என சொகுசாக இருந்துள்ளனர். இதில் லாபத் தொகை என பெயரில் சுமார் ரூ.2 கோடியை திரும்ப பல தவனையாக பாரதிராஜாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாரதிராஜா அவர்களிடம் மீதம் உள்ள பணத்தை கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பேசி தட்டி கழித்து வந்துள்ளனர். இதனால் பல ஆண்டுகள் கழிந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாரதிராஜ அவர்கள் மீது பெரம்பலூர் மாவட்ட குற்ற பிரிவு போலீசாரிடம் தனது வழக்கறிஞருடன் கடந்த 10.5.2025- ம் தேதி அன்று இது குறித்து புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் செய்து இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக ராசிபுரத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் தர்மபுரியை சேர்ந்த சுகனேஷ்வரன் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வக்குமாரி தலைமையிலான போலீசார் தேடி சென்றனர் அப்போது ராசிபுரத்தைச் சேர்ந்த பிரவினின் மாற்றும் அவரது தாயார் ஜெயா மற்றும் சகோதரி வினோதினி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.10 லட்சம் ரொக்கப் பணம், மற்றும் 143 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள், சொகுசு கார் ஆகியவற்றுடன் சொகுசு பங்களா மற்றும் இடத்திற்கான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜெயா மற்றும் வினோதினி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சுகனேஸ்வரன் பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பிரவீன் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தமோசடி கும்பல் சேலம் ஆத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இதே போன்று பணமோசடியில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சதுரங்க வேட்டை பட பாணியில் பெரம்பலூர் என்ஜினியரிடம் நடந்த ஆப்பிரிக்க தங்க சுரங்கத்தில் முதலீடு என்ற மோசடி சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.05.2026 - 18:20:46
Privacy-Data & cookie usage: