பெரம்பலூர்: சிதம்பரம் தொகுதி வேட்பாளர் விசிக தலைவர் தொல் திருமாவளவனை ஆதரித்து, அமைச்சர் சிவசங்கர் வாக்கு சேகரிப்பு!

schedule
2024-04-17 | 14:09h
update
2024-04-17 | 14:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Chidambaram Constituency candidate supporting Vishika President Thol Thirumavalavan, Minister Sivasankar collecting votes!

திமுக கூட்டணியில், சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வாக்குகளை இன்று சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

பேரளி, பிரச்சாரத்தை தொடங்கிய அவர், சித்தளி, அசூர், எழுமூர், வைத்தியநாதபுரம், வேப்பூர், பரவாய், அந்தூர், வரகூர், புதுவேட்டக்குடி, துங்கபுரம், அண்ணாநகர், கோவில்பாளையம், காடூர், நல்லறிக்கை, கொளப்பாடி, பெரியவெண்மணி, சின்னவெண்மணி, கரம்பியம், பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி, ஒதியம், குன்னம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்து பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார். முன்னாள் எம்.எல்.ஏ வரகூர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன், வேப்பூர் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, முன்னாள் சேர்மன் அழகு. நீலமேகம, மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

வரும் 2 நாட்களும், அயராமல் உழைத்து வேட்பாளர் திருமாவளவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி செய்ய கட்சியினரை கேட்டுக் கொண்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 23:53:40
Privacy-Data & cookie usage: