பெரம்பலூர்: முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்: கே.என். அருண்நேரு எம்.பி., தொடங்கி வைத்தார்!

schedule
2025-08-26 | 08:35h
update
2025-08-26 | 08:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Chief Minister’s breakfast scheme extended to government aided schools: K.N. Arun Nehru MP, inaugurated!

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கத்தை முதலமைச்சர் மு‌.க. ஸ்டாலின் சென்னையில் இன்று காலை தொடங்கி வைத்ததையடுத்து, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தொடக்கப் பள்ளியில், பெரம்பலூர் எம்.பி. கே.என். அருண்நேரு, தொடங்கி வைத்தார். கலெக்டர் ச. அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினர். மாணவர்களுக்கு காலை உணவாக சாம்பார் கேசரி வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில், பாளையம் RC நடுநிலைப்பள்ளியில் 54 மாணவர்களும், துறைமங்கலம் TELC நடுநிலைப்பள்ளியில் 90 மாணவர்களும், பெரம்பலூர் மவுலானா துவக்கப்பள்ளி 32 மாணவர்களும், பெரம்பலூர் RC பாத்திமா துவக்கப்பள்ளியில் 396 மாணவர்களும், பெரம்பலூர் தந்தை ரோவர் ஹேன்ஸ் துவக்கப்பள்ளியில் 310 மாணவர்கள் என 5 பள்ளிகளில் 882 மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைவர்.

Advertisement

இதில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் ராமர், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், ரோவர் கல்வி நிறுவனங்களின் சேர்மன் கே.வரதராஜன், திமுக வார்டு கவுன்சிலர்கள் ரஹமத்துல்லா சேகர், சித்தார்த், மணிவேல், தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் அரும்பாவூர் வள்ளியம்மை, பூலாம்பாடி துணைத் தலைவர் செல்வலட்சுமி சேகர், திமுக ஆதி திராவிடர் மாநில நலக் குழு உறுப்பினர் சன்.சம்பத், திமுக பிரமுகர் பரிதி.நீலமேகம், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், கிருத்துவ நல்லெண்ண இயக்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரெனோ பாஸ்டின், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், வருவாய்த்துறை மற்றும் கல்வி துறையினர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 14:03:25
Privacy-Data & cookie usage: