பெரம்பலூர்: முதலமைச்சரின் VC நிகழ்ச்சி; ஒரு மணி நேரம் தாமதமாக வந்த சப்-கலெக்டர்! காத்திருந்த எம்.எல்.ஏ!!

schedule
2025-12-22 | 13:15h
update
2025-12-22 | 13:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Chief Minister’s VC program; the Sub-Collector arrived an hour late! The MLA was kept waiting!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பாடி மற்றும் லப்பைகுடிகாடு பேரூராட்சிகளில் (ரூ. 44 லட்சம்) தலா ரூ. 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் புதிய கிளை நூலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். பின்னர், பூலாம்பாடியில் உள்ள நூலக கட்டடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் சப்-கலெக்டர் அனிதா, மாவட்ட திமுக துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணைத் தலைவர் செல்வலட்சுமி சேகர், மாவட்ட நூலக அலுவலர் முத்துக்குமரன், நூலகர் தில்சாத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் கு. வரதராஜன், நூலக உறுப்பினர்கள் புரவலர்கள் கொடையாளர்கள், பொதுமக்கள், திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், ஒப்பந்தாரர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகத்தில் வைஃபை வசதி, விருச்சுவல் ப்ரோகிராம், வசதிகள் உள்ளன. பூலாம்பாடி நூலகம் 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் இதுவரை சிறப்பாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

முதலமைச்சரின் நிகழ்ச்சிக்கான நேரம் இன்று காலை 10.15 மணிக்கு பூலாம்பாடியில் நடைபெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், ஆர்டிஓ அனிதா சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக பூலாம்பாடிக்கு வந்தடைந்தார். காலையில் சுமார் 10 மணிக்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ ம.பிரபாகரன், காலதாமதம் ஆவதை அறிந்து, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று தேர்வை வெல்வோம் புத்தகங்களை வழங்க சென்று விட்டு வந்தார். அவருடன் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்.டி.ஓ அனிதா வரும்வரை காத்திருந்தனர். பின்னர் அவர் வந்த உடன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டின் முக்கியமான மக்கள் பிரதியான சட்டம் படித்த ஒரு சட்ட மன்ற உறுப்பினரே அதிகாரிக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்கும் நிலையானல், சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை நினைத்து பொதுமக்கள் வேதனை அடைந்தனர். அரசு அதிகாரிகள் பொதுமக்களைதான் மதிப்பதில்லை என்றால், அரசியல்வாதிகளையுமா இப்படி நடத்த வேண்டும், என நொந்து கொண்டனர்.

ஆர்டிஓ அனிதாவிற்காக காத்திருக்கும் எம்.எல்.ஏ பிரபாகரன்!

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 12:53:45
Privacy-Data & cookie usage: