Perambalur: Child marriage and POCSO case – 9 individuals sentenced to 22 years in prison each; fines also imposed!
பெரம்பலூர் அருகே 15 வயது குழந்தையை திருமணம் செய்த போக்சோ வழக்கில் ஒருவரை விடுவித்த மகிளா நீதிமன்றம் 9 பேருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2021 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ மற்றும் குழந்தை திருமண வழக்கின் 9 குற்றவாளிக்கு 22 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.60,000 அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை குழந்தை திருமணம் மற்றும் பாலியல் தொந்தரவு செய்ததாக பரவாய் கிராமத்ததை சேர்ந்த பெரியசாமி மகன் ஜெயபால்(22) இவரது பெற்றோர்களள் பட்டு மற்றும் உறவினர்கள், நண்பர்களான முத்துலிங்கம், மாணிக்கம் மகன் ராசு, ராமக்கண்ணு மகன் கலியமூர்த்தி, பிச்சைமுத்து மகன் தர்மர், பரமசிவம் மகன் சேப்பெருமாள் இவரது மனைவி ராணி மற்றும் A10. பரமசிவம் மனைவி மாரிமுத்து சேர்ந்தவர்கள் மீது மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு Cr.No.34/21 U/s 5(l), 6, 17, of Pocso Act r/w 9, 10 Child Marriage Act & 294(b), 323, 506(ii) IPC போக்சோ மற்றும் குழந்தை திருமணம் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று 22.10.2026-ம் தேதி நீதிமன்ற விசாரணையில் வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 9 பேரையும் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் A1.ஜெயபாலுக்கு 5(l) of POCSO Act பிரிவின் கீழ் 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையுடன், 50,000 ரூபாய் அபராதமும் மற்றும் Child Marriage Act 9ன் பிரிவின் கீழ் 2 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000. அபராதமும்,
மற்ற பெரியசாமி, பட்டு, ராசு, கலியமூர்த்தி, தர்மர், சேப்பெருமாள், ராணி, மற்றும் மாரிமுத்து ஆகிய 8 பேருக்கு 17 of POCSO Act – பிரிவின் கீழ் 20 வருடம் சிறை தண்டனையும் மற்றும் 50,000 ரூபாய் அபராதமும், 10 Child Marriage Act. பிரிவின் கீழ் 2 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும், என மொத்தம் 22 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் 60,000 ரூபாய் அபராதம் எனவும் மேற்படி தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும். முத்துலிங்கம் என்பவரை விடுதலை செய்தும், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி வி.ஆனந்தன் தீர்ப்பு விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்த போலீசாரை எஸ்.பி லலித்குமார் பாராட்டினார்.