Perambalur, Chinna Penukonda Vasavi Club Sangha Executives accept the post! MLA Prabhakaran attended!!
பெரம்பலூரில், சின்ன பெணுகொண்டா வாசவி சங்க நிர்வாகிகள் 3வது பதவி ஏற்பு விழா, கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மஹாலில், நடந்தது. மாவட்ட ஆளுநர் வி.ராம்குமார், பணியமர்த்தினார். சிறப்பு அழைப்பாளராக, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், போலீஸ் எஸ்.பி மணியும், சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு துணைத் தலைவர் சித்ராவினோத், பன்னாட்டு துணை பொருளாளர் எஸ்.நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சக்தி நித்திஷ் பாலாஜி, மாவட்ட பொருளாளர் உமா மகேஸ்வரி நிர்மல்குமார், மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கணேஷ்ராம், மண்டலத் தலைவர் வி.ராஜசேகரன், மண்டல செயலாளர் பி.தனபால், வட்டார தலைவர் பி.ஷைலஜா, மாவட்ட நிகழச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுகுமார், வாழ்த்துரை வழங்கினர்.
தலைவராக கோகுலம் ஜீவல்ஸ் வி.குணசீலன், பொருளாளராக கே.பிரபு, செயலாளராக கே.மாதேஸ்வரன் ஆகியோரும், உபதலைவர்களாக என்.வரதராஜன், எஸ்.கார்த்திக், துணை செயலாளர்களாக மதுரா. எஸ் குமார், எஸ்.சிவராஜ், துணை பொருளாளராக முரளிதரன், சபரிகிரிவாசன், ஆலோசர்களாக பலராமன், தனபால், முருகன், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக செந்தில்ராஜா, சங்க விரிவாக்க தலைவராக ரவிச்சந்திரன், ஆகியோரும், இயக்குனர்களாக ஆத்மநாபன், ரமேஷ், குமார், ரவி, எஸ்.பி. வெங்கடேஷ், மதன், ஆர்.வெங்கடேஷ், பாலசுப்பிரமணி, தாரணி, மணிராம், சதீஸ், குமார், மோகன், கோபால், ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
விளம்பரம்:
சிறப்பு திட்டங்களுக்கு. சுற்றுலா குழுவிற்கு, பாபு தினேஷ், ஹரி நாரயணன், சுப்பு, ஆகியோரும், அன்னதான குழுவிற்கு அகேஷ், ரவி, சதீஷ், ஹரிஹரன், ஸ்வர்ணக்குமாரும், குழந்தைகள் மேம்பாட்டுக்குழு விற்கு, அனிதா, சுபா, உமாமகேஸ்வரி, பிரேமா, அகிலா, சத்யா, பத்மா, சசிகலா, சரவணன், யோகேஷ் ஆகியோரும், ஆரோக்கிய திட்ட குழுவிற்கு, டாக்டர்கள், வேல்முருகன், நீலகண்டன், கண்ணன், குரும்பலூர் ரமேஷ், வேப்பந்தட்டை குணசேகரன், பிறந்த நாள் திட்ட குழுவிற்கு 4 ரோடு பாபு, சிவராமன், மகேந்திரன், கிருஷ்ணாபுரம் முரளி, ஸ்ரீகிரிவாசன், அரணாரை முரளியும், தகவல் தொடர்பு அலுவலர்களாக ராஜா, பாலாஜி ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
விழாவில், முதியோர் இல்லம், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.