பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா; நாளை பூச்சொரிதல்: 15ம் தேதி தேரோட்டம்!

schedule
2025-04-28 | 14:20h
update
2025-04-28 | 14:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Chithirai festival of Siruvachur Madhurakaliamman Temple; Flower shower tomorrow: Chariot procession on the 15th!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயி லில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு திருவிழா நாளை (29ம்தேதி) பூச்சொரிதல் விழாவுடன் தொடங்குகிறது.

Advertisement

நாளை காலை 11 மணிக்கு மூலவர் அபிஷேகம் உச்சிக்கால பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு கோயில் நடையில் இருந்து ஊர் பொது மக்களுடன் அம்மனுக்கு பூ கொண்டு வரும் பூச்சொரிதல் விழா நடக்கிறது.6ம்தேதி இரவு 12மணிக்கு பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலும், அதிகாலை 4 மணிக்கு மதுர காளியம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடைபெறுகிறது. 7ம்தேதி சந்தி மறித் தல், 8ம் தேதி குடி அழைத்தல், 9ம் தேதி சிவவழி பாடு, 10ம்தேதி பெருமாள் வழிபாடு, 11ம்தேதி மாரியம்மன் வழிபாடு, 12ம் தேதி அய்யனார் வழி பாடு, 13ம் தேதி மலை வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 14ம் தேதி திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 15ம்தேதி காலை 10 மணிக்கு நடை பெறுகிறது. 16ம்தேதி ஊஞ்சல் விழாவும், 17ம் தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அசனாம்பிகை, தக்கார் லட்சுமணன் மற்றும் கோயில் மற்றும் பணியாளர்கள், பூசாரிகள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 03:39:48
Privacy-Data & cookie usage: