பெரம்பலூர்: 122 ஆண்டுகள் பழமையான தேவாலயம் புதிதாக கட்ட பட்டா , N.O.C வழங்க கிறித்தவர்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் கோரிக்கை!

schedule
2025-12-22 | 14:16h
update
2025-12-22 | 14:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Christians have appealed to the Perambalur Collector to issue a new title deed and NOC for their 122-year-old church, which has been newly constructed.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் 122 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய மாதா கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை இடித்துவிட்டு புதிய ஆலயம் கட்டுவதற்கு பட்டா மற்றும் தடையின்மைச் சான்று வழங்கிடக் கோரி பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம்- கத்தோலிக்க கிறிஸ்தவப் பொதுமக்கள் கோரிக்கை மனுஅளித்தனர்.

பாளையம் கிராமத்திலுள்ள புனித ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச் சேர்ந்த காரியஸ்தர்கள் மற்றும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அப்பகுதியின் தலைமை காரியஸ்தர் இருதயராஜ் தலைமையில் திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

Advertisement

பாளையம் கிராமத்தில் கடந்த 1903ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 122 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய மாதா தேவாலயம் உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு புணரமைக்கப்பட்ட இந்த தேவாலயம் தற்போது பழுதடைந்து மிகமோசமாக சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வருவதோடு, தினமும் ஜெபவழிபாடு நடத்தி வரும் பொதுமக்கள் தலையில் சிமெண்ட் கான்கிரீட் பூச்சிகள் கொட்டி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இந்தக் கோயில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், மிகப் பெரிய உயிர்ப்பலி நேரிடும் முன்பாக பழுதடைந்த கோவிலை இடித்துவிட்டு அதே இடத்தில் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர், பாளையம் புனித சூசையப்பர் தேவாலய பங்கு குரு ஆகியோரது ஆலோசனையின் பேரில், புதிய கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் கட்ட முயற்சி மேற்கொண்ட போது, தற்போது 122 வருடங்களாக கோவில் இருக்கும் இடத்திற்கு பட்டா இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.122 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அடங்கல், கல்வெட்டுகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பட்டா வழங்கவும், பின்னர், சிதிலமடைந்த கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டுவதற்கு தடையின்மைச் சான்று வழங்கவும் கேட்டுக் கொள்கிறோம் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மிருணாளினி மனு தொடர்பாக வருவாய்த் துறையினர் மூலமாக நேரில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 02:39:21
Privacy-Data & cookie usage: