பெரம்பலூர்: கிறிஸ்துஸ் விழா; அஸ்வின் ஸ்வீட்ஸில் பக்கெட் பலகாரம், ரூ39.க்கு ரிச் பிளம் கேக் அறிமுகம்!

schedule
2025-12-18 | 09:55h
update
2025-12-18 | 09:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Christmas celebrations; Ashwin Sweets introduces a bucket of snacks and a rich plum cake for ₹39!

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும், சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வரும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆண்டுதோறும் ரிச்பிளம் கேக் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கு புதிதாக கிறிஸ்துமஸ் பக்கெட் பலதாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 40 கிராம் எடை கொண்ட மினி கிப்ட் பேக் 39 ரூபாய்க்கும், 100 கிராம் எடை கொண்ட சிறிய டின் பாக்ஸ் ரூ. 119 -க்கும், 200 கிராம் எடை கொண்ட மீடியம் கிப்ட் பேக் ரூ. 199-க்கும், 400 கிராம் எடை கொண்ட கிராண்ட் டின் பாக்ஸ் ரூ.399 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் பக்கெட் பலகாரத்தில் பிளம்கேக், ஓட்ஸ் குக்கீஸ், நைஸ் மைசூர்பாக், அதிரசம், மிச்சர், கைமுறுக்கு, மினி தட்டை என 7 வகைகளுடன் கிறிஸ்மஸ் பாக்கெட் ரூபாய் 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல கிஃப்ட் கேம்பர்-ல் ரிச் பிளம் கேக், குக்கீஸ், மோத்தி லட்டு, காராமணி தட்டை, தேன்குழல் முறுக்கு, நேந்திரம் சிப்ஸ் கொண்ட கிஃப்ட் பாக்ஸ் ரூ. 799-க்கும், நட்ஸ் கலெக்சன் ரூ. 310-க்கும், பிரிமியம் நட்ஸ் டின் செட் ரூ.975-க்கும், ஓபன் ஹம்பர் 1799க்கும், நட்ஸ் & பக்கவலா பாக்ஸ் ரூ.1399க்கும் விற்பனை செய்யப்படுவதாக தன் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை துறை தலைவர் குணா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். பின்னர், வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை தொடங்கி வைத்தார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.04.2026 - 19:20:33
Privacy-Data & cookie usage: