பெரம்பலூர்:டீக்கடை சிலிண்டர் வெடித்து பலியான 7 பேருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்க கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்!

schedule
2026-09-06 | 08:06h
update
2026-09-06 | 08:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: CITU stages a protest demanding Chief Minister’s relief funds for the seven people who died in a tea shop cylinder explosion.


பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாசலம் என்பவரது டீக்கடையில் கடந்த ஆக.11 அன்று சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். 9 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட கோரி பெரம்பலூர் காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ பெரம்பலூர் மாவட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகி ரெங்கராஜ், ரெங்கநாதன் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எட்வின் ஆகியோர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆட்டோ சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் சந்திரன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் மணி, சிஐடியூ மாவட்ட நிர்வாகி பன்னீர்செல்வம், செல்வா, வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.09.2026 - 08:33:39
Privacy-Data & cookie usage: