Perambalur: CITU submits a petition to the Collector demanding the cancellation of an irregular tender to construct shops on highway-owned land that obstructs the view of the municipal office.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி நிர்வாகம் வணிக நோக்கில் கட்டடங்களை கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரூ.15 லட்ச டெண்டரை ரூ. 40 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து கட்டிடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வந்தது.
நகராட்சி நிர்வாகம் எந்தவித அனுமதி இல்லாமல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இது போன்ற வணிக நோக்கோடு கட்டிடம் கட்டுவது பொதுமக்களுக்கும் அங்குள்ள சாலையோர வியாபாரிகளுக்கும், ஆட்டோ தொழிலாளர்களுக்கும் இடையூறு கொடுக்கின்ற வகையில், நகராட்சி நிர்வாகம் கட்டிடங்களை கட்ட முயற்சித்து வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்துள்ளோம்.
நகராட்சி வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே அளவீடு செய்து குறிக்கப்பட்டுள்ளதை, கடந்த 12. 2 .2026 அன்று கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் எங்களது ஆட்சேபனையை பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் தெரிவித்துள்ளோம். அதற்கு பிறகு நெடுஞ்சாலைத்துறை சார்பாக மீண்டும் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஆனால், ஏற்கனவே அளவீடு செய்த இடத்திற்கும் தற்போது அளவீடுகள் செய்து குறித்த இடத்திற்கும் வேறுபாடு உள்ளதாக தெரிகிறது. அளவீடு செய்யும் பொழுது பெரம்பலூர் நகராட்சி ஆணையாளரோ நகராட்சி தலைவரோ அல்லது புகார் கொடுத்தவர் இல்லாமல் நகராட்சி தலைவரின் கணவர் முன்னிலையில் இது போன்ற நடவடிக்கை அரசு விதிமுறைகளுக்கு எதிரானதாகும் என்பதால், மீண்டும் அளவீடு செய்து எல்லைகல் மாற்றப்பட்டுள்ளது குறித்து 24. 2 .2026 அன்று நெடுஞ்சாலை துறைக்கும், பெரம்பலூர் நகர காவல் துறையிலும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு அலுவலகத்தை மறைத்து கட்டடம் கட்டுவது உள் நோக்கம் கொண்டதாகும். பொது மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற வகையில் பொது இடத்தை பயன்படுத்துவதற்கு மாறாக வணிக நோக்கோடு செயல்படும் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மற்றும் பழைய பேருந்து நிலையம் – குரு ஹோட்டல் அருகில் உள்ள பொதுக் கழிவறையை இடித்துவிட்டு தனியார் பயன்பாட்டுக்கு விடக்கூடாது.
என்றும், இது போன்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கேட்டுக் கொள்வதுடன், பெரம்பலூர் நகராட்சிக்கு முன்பு 8 கடைகளுக்கு ரூபாய். 15 லட்சம் மதிப்புள்ள மதிப்பீட்டை 40 லட்சத்திற்கு கூடுதலாக டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மீதும் ஒப்பந்தக்காரர்கள் மீதும் உரிய விசாரணை செய்து முறைகேடான டெண்டரை ரத்து செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பெரம்பலூர் நகரத்தில் தொடர் திருட்டு நடப்பதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும்மாறும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா போன்ற வசதிகள் ஏதும் அமைக்காமல் உள்நோக்கத்தோடு பிரதிபலனை எதிர்பார்த்து கட்டடங்களை கட்டி முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சி.ஐ.டி.யூ மாவட்ட நிர்வாகி கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.