Perambalur: CITU’s 56th Foundation Day observed by the District Committee.
பெரம்பலூரில், இந்திய தொழிற்சங்க மையம் பெரம்பலூர் மாவட்ட குழு சார்பில் சிஐடியு 56வது அமைப்பு தின சிறப்பு பேரவை 3 ரோடு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட கன்வினர் எஸ். அகஸ்டின் தலைமையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ரெங்கநாதன் வரவேற்றார், சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ். ரெங்கராஜன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் குணசேகரன், ரெங்கராஜ், கட்டுமான சங்க நிர்வாகி ஆறுமுகம், ஆட்டோ சங்க நிர்வாகிகள் பெரியசாமி, சந்திரன், எம்.ஆர்.எஃப் சங்கம் கல்லாதியன், கிருஷ்ணசாமி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி மணி, பாலகிருஷ்ணன், பார்த்திபன், தேவா மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிதி பொறுப்பாளர் ஜி . செல்வி நன்றி கூறினார்.