கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க, பெரம்பலூர் நகர திமுக கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2022-06-02 | 10:55h
update
2022-06-02 | 10:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur city DMK decides to award Bharat Ratna to Kalaignar Karunanidhi

பெரம்பலூர் நகர திமுக கூட்டம், நகர செயலாளரும் எம்.எல்.வுமான பெரம்பலூர் பிரபாகரன் தலைமையில், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. இதில்

மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில்,

Advertisement

மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்- நகராட்சி துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஒஜீர், நகர துணை செயலாளர் சபியுல்லா, வார்டு செயலாளர்கள் தங்க மயில். செந்தில், ஜே.எஸ்.ஆர் கருணாநிதிமணிவாசகம், முத்துக்குமார், பரிதி(எ) நீலமேகம்,

நகராட்சி கவுன்சிலர்கள் துரை.காமராஜ், நல்லுசாமி நகர மாணவரணி அமைப்பாளர் ரினோ பாஸ்டின், மகளிர் அணி பாத்திமா செல்வராஜ்,ராஜ லெட்சுமி, ஜோதி வேல், செல்வ கனி மதியழகன் மற்றும் சிவக்குமார், ஜெயராமன், மது பாலன் , மணிவேல், சாம்ராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும், கருணாநிதியின் பிறந்த நாளை ஜீன் மாதம் முழுவதும் பெரம்பலூர் நகரம் முழுவதும் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 18:36:38
Privacy-Data & cookie usage: