பெரம்பலூர்; எல் நினோ தாக்கத்தில் இருந்து விவசாயிகள் தப்பிக்க காப்பீடு செய்ய கலெக்டர் தகவல்!

schedule
2026-07-16 | 15:30h
update
2026-07-16 | 15:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector advises farmers to take out insurance to protect themselves from the impact of El Niño.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 2026-27 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

தற்போது நிலவும் எல்நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில், வாழை, மரவள்ளி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணைய தளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை வெங்காயம் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 31.08.2026 ஆகும். மற்றும் வாழை, மரவள்ளி மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு 15.09.2026 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ். மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு / நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு / நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவைமையங்கள் (இ-சேவைமையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் (https://pmfby.gov.in/) உள்ள “விவசாயிகள் கார்னர்” வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படமாட்டாது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன் மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை. வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பெற்றுக் கொண்டு. அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் அதற்கான கிராமம் / குறு வட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.. விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் இப்பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அறிவிக்கை செய்த பகுதிகளில் காப்பீடு செய்து பயனடையவும், மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ, தோட்டக்கலை அலுவலரையோ, உதவி தோட்டக்கலை அலுவலரையோ, வங்கி கிளைகளையோ அணுகி பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.07.2026 - 15:35:30
Privacy-Data & cookie usage: