உலமாக்களுக்கு, மானிய விலையில் இரு சக்கர வாகனம் : பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2021-07-20 | 16:27h
update
2021-07-20 | 16:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector announces to Two-wheeler at subsidized rates for Ulama’s

பெரம்பலூர் கலெக்டர் வெங்டபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பபில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, பெரம்பலூரில் உள்ள வக்ப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனத்தின் திறன் 125 சிசி-க்கு மிகாமலும், வாகன விதிமுறை சட்டம் 1998ன்படி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 01.01.2020க்கு பின்னர் தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25,000-இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 10 வக்ப் நிறுவனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரிவிண்ணப்பித்தால், பேஸ்இமாம், அரபிஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் மட்டுமே மானியத் தொகை வழங்கப்படும்.

Advertisement

எனவே, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமான சான்று, 40 வயதிற்குட்பட்டதற்கான சான்று, புகைப்படம், சாதி சான்று, மாற்றுத் திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட மாற்று திறனாளி சான்று, ஓட்டுநர் உரிமம் (அ) பழகுனர் சான்று, கல்வித் தகுதி சான்று (குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி), வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று (மாவட்ட வக்ப் கண்காணிப்பாளரின் மேலொப்பத்துடன்) மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து மேற்காணும் ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 14:50:03
Privacy-Data & cookie usage: