தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு!

schedule
2022-11-12 | 15:01h
update
2022-11-12 | 15:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector Calling Eligible National Girl Child Award!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த கீழ்காணும் தகுதிகளுடைய பெண் குழந்தைகள் உரிய விபரங்களுடன் 30.11.2022 மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யவும்,

Advertisement

பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேரு எதாவது வகையில் சிறப்பான ̸ தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் என மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளையுடையோர் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 07:27:45
Privacy-Data & cookie usage: