சிறுபான்மையினர் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு- பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-12-10 | 07:19h
update
2021-12-10 | 07:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector extends deadline for minority students to get scholarships

பெரம்பலுர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட ) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து 2021-2022ஆம் ஆண்டிற்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021 என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:39:17
Privacy-Data & cookie usage: