Perambalur collector information of the camp giving vitamin A vital fluid to children!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் A திரவம் 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. வைட்டமின் A திரவம் குழந்தைகள் சராசரி வளர்ச்சியடைய உதவி செய்வதோடுஈ கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது.

வரும் செப்.4. முதல் 09.09.2023 வரை 43,448 குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் வீடு வீடாக சென்று வைட்டமின் ஏ திரவத்தை வழங்க உள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும், எனதெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!