பி.எம். கிசான் திட்டம் 14-வது தவணை : விவசாயிகள் ஆதாரை இணைக்க, பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-05-22 | 18:21h
update
2023-05-22 | 18:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Collector Information to Link Farmers Aadhaar to Get P.M. Kisan Scheme 14th Installment!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் 14-வது தவணை தொகையை தொடர்ந்து பெற தங்களது ஆதார் விவரங்களை (e-KYC) பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Advertisement

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு, 3 தவணைகளில் ரூபாய் 2000 வீதம் மொத்தமாக ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 13 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 14-வது தவணை பி.எம்.கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை மே 25-ஆம் தேதிக்குள் பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 14-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்யலாம்.

இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 7,070 பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். எனவே பதிவேற்றம் செய்யாதவர்கள் மே 25-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 02:51:44
Privacy-Data & cookie usage: