Perambalur Collector inspects college dormitory (Hostel)
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் வெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் பதிவேடுகளில் பதிவு செய்ப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், மேலும், உணவு தயாரிக்கும் பொருட்கள், போர்வைகள், உணவு பொருள் சேமிப்பு அறை, சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் மற்றும் குடிநீர், தங்கும்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து பழைய பெரம்பலுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரம்பலுார் மாவட்டத்தில் கிடைத்த தொல்பொருள் படிமங்கள் குறித்து கண்காட்சி அமைக்கப்படவுள்ள பகுதிகளையும், அலுவலகத்தை சுற்றி பேவர் பிளாக் பாதை அமைக்கப்பட்டுவரும் பணிகளையும் பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரமணகோபால், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி , குரும்பலுார் பேரூராட்சி செயல் அலுவலர் ரோஸி, பெரம்பலுார் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.