பெரம்பலூர்: பெங்களூரில் இருந்து வந்த தேர்தல் வாக்குச்சீட்டு எந்திரங்களை பார்வையிட்டார் கலெக்டர்!

schedule
2025-09-02 | 15:49h
update
2025-09-02 | 15:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector inspects election voting machines from Bangalore!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ந.மிருணாளனி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 2026க்கான சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 100 கட்டுப்பாட்டு இயந்திரம் (Control Unit) 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (VVPAT) பாதுகாப்பாக பெரம்பலூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வைப்பதை ஆய்வு செய்தார். முன்னதாக, கலெக்டர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறக்கப்பட்டது. பின்னர், ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் கண்காணிப்பு கேமரா செயல்பாட்டையும் கலெக்டர் பார்வையிட்டார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.05.2026 - 18:26:52
Privacy-Data & cookie usage: