பெரம்பலூர்: அரசு மாணவர்கள் விடுதிகளில் இன்று காலை கலெக்டர் ஆய்வு!

schedule
2025-09-01 | 06:53h
update
2025-09-01 | 06:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Collector inspects government student hostels this morning!

பெரம்பலூர் கலெக்டர் ந.மிருணாளனி இன்று காலை, அரசின் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவ -மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், விடுதியில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களிடம் தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கபடுகிறதா, கழிவறை மற்றும் விடுதியை தூய்மையாக பராமரிக்கிறார்களா என்பது குறித்தும் விடுதி காப்பாளரிடம் விடுதியை தூய்மையாக பராமரித்திட அறிவுறுத்தினார்.

Advertisement

விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் விடுதியில் தங்கியுள்ள மாணக்கர்களின் எண்ணிக்கை, தினசரி உணவு பட்டியல் உள்ளிட்ட விபரங்களையும் ஆய்வு செய்தார். மாணவ மாணவியரிடம் கலந்துரையாடிய கலெக்டர் தமிழக அரசு, பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அதை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறை கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 08:40:41
Privacy-Data & cookie usage: